நடிகர் யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

 
yash

நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘டாக்சிக்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் தான் இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம் . இதில் பல்வேறு ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றி வருவைத்தால், ஹாலிவுட்டிலும் ‘டாக்சிக்’ படத்தினை வெளியிட, அங்குள்ள முன்னணி ஸ்டூடியோக்களுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனிடையே, படத்தின் ஒவ்வொரு காட்சியினையும் இரண்டு முறை காட்சிப்படுத்தி வருகிறார்கள். ஒரு முறை ஆங்கிலத்திலும், இன்னொரு முறை கன்னடத்திலும் படமாக்குகிறார்கள்.

<a href=https://youtube.com/embed/0PfErHA3zzQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/0PfErHA3zzQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இதனால் படப்பிடிப்பு செலவும் அதிமாகி இருக்கிறது. அதைத்தொடர்ந்து வெளியான டாக்சிக் படத்தின் டீசருக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி டாக்சிக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.