மஞ்சள் அழகி கீர்த்தி ஷெட்டி.. ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள் !

 
keerthy shetty

நடிகை கீர்த்த் ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

keerthy shetty

தெலுங்கில் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயெ ஒட்டுமொத்த ரசிகர்களிடையே பிரபலமான இவர், தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையாகிவிட்டார். சில படங்கள் மட்டுமே நடித்துள்ள இவர், பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தெலுங்கும் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். 

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்.  நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் இப்படம்  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இதையடுத்து ஷ்யாம் சிங்கா ராய் என்ற தெலுங்கு படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மஞ்சள் நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் லைக்குகளை குவித்து வருகிறது.