×

பைரைட்ஸ் ஆஃப் தி கரிபியன் கெட்டப்பில் கலக்கும் யோகிபாபு!

பிரபு ராம் சி இயக்கத்தில் மகத் ராகவேந்திரா ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா மற்றும் சாக்ஷி அகர்வால் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். தற்போது யோகிபாபு இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்திலிருந்து வெளியான புகைப்படத்தில் யோகிபாபு பைரைட்ஸ் ஆப் தி கரிபியன், ஜேக் ஸ்பேரோ கெட்டப்பில் காணப்படுகிறார். லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படம் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. “மகத் ஒரு ரிசார்ட்டில் ஐஸ்வர்யா
 

பிரபு ராம் சி இயக்கத்தில் மகத் ராகவேந்திரா ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா தத்தா மற்றும் சாக்ஷி அகர்வால் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

தற்போது யோகிபாபு இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்திலிருந்து வெளியான புகைப்படத்தில் யோகிபாபு பைரைட்ஸ் ஆப் தி கரிபியன், ஜேக் ஸ்பேரோ கெட்டப்பில் காணப்படுகிறார்.

லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படம் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. “மகத் ஒரு ரிசார்ட்டில் ஐஸ்வர்யா தத்தாவை (கதாநாயகி) தேடும் போது, யோகி பாபு ஒரு புதையலைத் தேடி அங்கே வருகிறார்.

யோகி பாபுவை ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நாங்கள் முடிவெடுத்தோம். சீன்களை எழுதும் போதே இதைப் பற்றி ஏற்கனவே நினைத்தேன், யோகி பாபு மட்டுமே இந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று உணர்ந்தேன். நான் அவரிடம் சொன்னபோது, ​​அவருக்கும் இந்தக் கதாபாத்திரம் பிடித்துவிட்டது.” என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

“இந்த மாதத்திற்குள் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளோம், மேலும் 2021-ல் முதல் சில மாதங்களில் படத்தை வெளியிடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.