×

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன யோகிபாபு: என்ன காரணம்?

 

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நடிகர் யோகி பாபு தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் கட்சி, பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது என்பதும், இந்த வெற்றியின் காரணமாக நடிகர் பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் ஆக நியமனம் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில், பவன் கல்யாண் சமீபத்தில் பேட்டி அளித்த போது, யோகி பாபு நடித்த ’மண்டேலா’ படத்தை பாராட்டி சில வார்த்தைகள் கூறியிருந்தார். இது குறித்து வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில், தனது படத்தை பாராட்டிய ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக யோகி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: என்னுடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமான மண்டேலா - படத்தை முக்கியமான நேரலையில் நினைவு கூர்ந்த ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் தெலுங்கு திரை உலகத்தின் முக்கியமான திரை ஆளுமையும் திரு.பவன் கல்யாண் அவர்களுக்கு என்னுடைய பணிவார்ந்த நன்றிகள் யோகி பாபு ஹீரோவாக நடித்த ’மண்டேலா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்த நிலையில், இந்த படத்தின் வெற்றியின் காரணமாக அவர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

null