×

யோகிபாபு நடிப்பில் ‘போட்’ பட டீசர் வெளியீடு!

 

யோகிபாபு நடிப்பில் தயாராகியுள்ள போட் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலமாக பிரபலமானவர் இயக்குநர் சிம்புதேவன். தொடர்ந்து, புலி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், கதடதபற, விக்டிம் உள்ளிட்ட படங்களை இயகியுள்ளார். இந்த நிலையில் தற்போது யோகிபாபுவை வைத்து போட் படத்தை இயக்கியுள்ளார். இதில், மதுமிதா,கௌரி ஜி கிஷன், சின்னி ஜெயந்த், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

<a href=https://youtube.com/embed/LWfVIJHI06s?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/LWfVIJHI06s/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Boat - Teaser | Chimbudeven | Yogi Babu | Gouri G Kishan | Ghibran" width="695">

முழுக்க முழுக்க கடலை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, அதில் இயக்குநர் கௌதம் மேனன் கதை சொல்ல துவங்குகிறார்.  பத்து நபர்களுடன் கடலில் செல்லும் படகு, விரிசல் விடுகிறது, பசியுடன் சுறா ஒன்று சுற்றுகிறது. இதனை அவர்கள் எப்படி சமாளித்தார்கள், அதுமட்டுமலாமல் அவர்களுக்குள் நடக்கும் சண்டை இவைதான் படத்தின் கதை. தொடர்ந்து இந்த டீசர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.