×

ஓடிடியிலும் வரவேற்பை பெறும் ‘பொம்மை நாயகி’... யோகிபாபு படத்திற்கு குவியும் பாராட்டுக்கள் !

 

யோகிபாபு நடிப்பில் உருவான ‘பொம்மை நாயகி’ படம் ஓடிடியிலும் வரவேற்பை பெற்று வருகிறது. 

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘பொம்மை நாயகி‘. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் போராட்டம்தான் இந்த படத்தின் கதை. அதனால் மலை சார்ந்த இடமான தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபல காமெடி நடிகராக யோகிபாபு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது ஒரு பெண் குழந்தையின் தந்தையாக யோகிபாபுவும், அவரது மகளாக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீமதி நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

தேனி பகுதியில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட இப்படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் இப்படம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி ஜி5 இணையத்தளத்தில் வெளியானது. ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த படத்திற்கு ஓடிடியிலும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.