×

ஃபீல் குட் காமெடி படத்தில் யோகிபாபு.. ‘லக்கி மேன்’ டீசர் வெளியீடு  

 

 யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘லக்கி மேன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு, தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் யோகிபாபு நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘லக்கி மேன்’.  யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். திங்க் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தில் யோகிபாபுடன் இணைந்து நடிகர் வீரா, ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி. அமித் சாத்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தீப் விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதை கண்டறியும் ஒரு மனிதனனின் வாழ்க்கை பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. 

ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.