×

மெலோடியாக உருவாகியுள்ள ‘தூர வானே’... யோகிபாபுவின் ‘யானை முகத்தான்’ ஃப்ர்ஸ்ட் சிங்கள் !

 

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘யானை முகத்தான்’ முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

யோகிபாபுவின் தனித்துவமான நடிப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யானை முகத்தான்’. மலையாள முன்னணி இயக்குனரான ரெஜிஷ் மிதிலா இப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து கருணாகரன் மற்றும் ரமேஷ் திலக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன ஊர்வசி, ஜார்ஜ் மரியன், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் பரத் சங்கர் இசையில் உருவாகியுள்ள ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிஎம் லோகேஷ் எழுதிய இந்த பாடலை சத்யபிரகாஷ் பாடியுள்ளார். மெலோடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/V78vd-RcPU0?autoplay=1&mute=1&start=165><img src=https://img.youtube.com/vi/V78vd-RcPU0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">