×

‘யானை முகத்தான்’ -ஆக காட்சியளிக்கும் யோகிபாபு... டீசர் வெளியீடு 

 

 யோகிபாபுவின் ‘யானை முகத்தான்’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

மலையாள முன்னணி இயக்குனரான ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யானை முகத்தான்’. இந்த படத்தின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன் மற்றும் ரமேஷ் திலக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஊர்வசி, ஜார்ஜ் மரியன், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பரத் சங்கர் இசையில் உருவாகியுள்ள  இப்படத்திற்கு கார்த்திக் எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசரில் யோகிபாபு விநாயகர் கடவுள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

<a href=https://youtube.com/embed/WVnjpt3ss6M?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/WVnjpt3ss6M/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">