☰
×

யோகிபாபு நடிக்கும் சென்டிமெண்ட் படம், ‘சிங்காரம்’-இயக்குனர் யார் தெரியுமா ?

 

‘ராஜவம்சம்’ கே.வி.கதிர்வேலு இயக்க, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ள காமெடி மற்றும் குடும்ப சென்டிமெண்ட் படம், ‘சிங்காரம்’. ராக் புரொடக்‌ஷன் சார்பில் ஏ.எஸ்.ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 30ம் தேதி படம் திரைக்கு வருகிறது. கதையின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். மற்றும் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரியா வின்சென்ட், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபீதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம்.கணேஷ்கர் நடித்துள்ளனர்.

பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, குருராஜ் அரங்கம் அமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்துள்ளார். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த யோகி பாபு, தனக்கு எதிரான அடக்குமுறைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு, தனது வாழ்க்கையை தீர்மானிக்கும் துணிச்சலை பெறுவதே மையக்கரு. தனது உரிமையையும், சுயமரியாதையையும் நிலைநாட்ட போராடும் சாதாரண மனிதனின் பயணத்தை நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் படமாக்கியுள்ளனர்.