×

அனிரூத்துடன் இணைந்த யுவன்.. ‘பரம்பொருள்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் !

 

‘பரம்பொருள்’ படத்திற்காக ராக் ஸ்டார் அனிரூத்துடன் இசையமைப்பாளர் யுவன் இணைந்துள்ளார். 

அறிமுக இயக்குனர் அரவிந்த ராஜ் இயக்கத்தில் அமிதாஷ் பிரதான் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பரம்பொருள்’. நடிகர் அமிதாஷ் பிரதான், தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். இந்த படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

நடிகை காஷ்மீரா பர்தேஷி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை வெளியாகும் இந்த பாடலுக்காக யுவனுடன் ராக் ஸ்டார் அனிரூத்தும் இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பு ப்ரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது.