×

இவங்க தொல்லை தாங்க முடியல.. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஜாலி பதிவு 
 

 

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தற்போது விஜய்யின் GOAT படத்திற்கு இசையமைத்து வருகிறார்.அவர் தற்போது படத்தின் பின்னணி இசை பணிகளை தொடங்கிவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோவுடன் அறிவித்து இருந்தார் வெங்கட் பிரபு.இந்நிலையில் ஸ்டூடியோவில் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தன் இருவரும் தரையில் அமர்ந்திருக்க, யுவன் போன் பேசிகொண்டிருக்கும் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது.இவங்க தொல்லை தாங்க முடியல என குறிப்பிட்டு யுவன் தான் அந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். யுவன் தற்போது GOAT படம் மட்டுமின்றி விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.