இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் யுவன் சங்கர் ராஜா.. ஹீரோ யாரு தெரியுமா?
Oct 16, 2024, 19:05 IST
யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தி கோட் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களையும் தயாரித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் மற்றும் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திடைப்படங்களை அவர் தயாரித்துள்ளார். இந்நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜா இயக்குநர் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த யுவன் சங்கர் ராஜா, "தான் இயக்கப்போகும் படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைப்பேன்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.