×

இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் யுவன் பற்ற வைத்த நெருப்பு ” இந்தி தெரியாது போடா”!

சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில், இந்தி பேசும் அதிகாரிகளால் தனக்கு நேர்ந்த அவமரியாதையை இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அணிந்த ஒரு ஒரு டீ சர்ட் புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில், யுவன் அணிந்துள்ள டீசர்ட்டில் திருவள்ளுவர் படத்துடன் நான் தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதுபோல அவர் நண்பர், நடிகர்
 

சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில், இந்தி பேசும் அதிகாரிகளால் தனக்கு நேர்ந்த அவமரியாதையை இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அணிந்த ஒரு ஒரு டீ சர்ட் புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில், யுவன் அணிந்துள்ள டீசர்ட்டில் திருவள்ளுவர் படத்துடன் நான் தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதுபோல அவர் நண்பர், நடிகர் ஸ்ரீரிஷ் அணிந்துள்ள, சிவப்பு வண்ண டீசர்ட்டில் “இந்தி பேச முடியாது போடா’ என்று உள்ளது.

இந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகியுள்ளது.சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட இந்த புகைப்படங்கள் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், தமிழகம் உள்பட எல்லா மாநிலங்களிலும் மூன்றாவது மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த விஷயத்தில் மூன்றாவது மொழியாக இந்தியை திணிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டமாக உள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் மூன்றாவது மொழியை அமல்படுத்துவதற்கான எந்தவிதமான யோசனையையும் இல்லை என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதற்கு தமிழக எதிர்க் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக உள்ளிட்ட சிலர் மட்டும் இந்தியைக் கற்பிக்கவேண்டும் என ஆதரவு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் .

இந்த நிலையில் தமிழக இளைஞர்கள் மத்தியில் இந்திக்கு எதிரான மனநிலையே உருவாக்கி உள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாகவே யுவன் சங்கர் ராஜா தனது பனியனில், இந்திக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நடிகர் சாந்தனுவும், அவரது மனைவியும் இதே வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்துள்ளதும்.டிரெண்டிங் ஆகியுள்ளது.

தொடர்ச்சியாக , தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு மனநிலை நீடித்து வரும் நிலையில் இந்த சம்பவங்களும் கவனம் பெற்றுள்ளன.

இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த அனுபவங்களைப்போல, அதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல சமீபத்தில் , காவிரி தொடர்பான காவிரி தொடர்பாக , தகவல் உரிமை சட்டத்தில் கேட்டுக்கொண்டிருந்த கேள்விக்கு மத்திய நீர் சக்தி அமைச்சகம் அளித்த பதில் முழுவதும் இந்தியிலேயே இருந்ததும் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.

பொதுவாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில். மத்திய அரசின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ள நிலையில் இந்தியில் பதில் அளிப்பதும், இந்தியை முன்னிலைப்படுத்துவதும் பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்தியனாக இருக்க வேண்டும் என்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என , இந்தி பேசும் அதிகாரிகளின் மனநிலை , அரசியல் குழப்பங்களை உருவாக்கி வரும் நிலையில், யுவன் போன்ற தமிழக இளைஞர்கள் எதிர்வினையாற்றுவது தேசிய அளவின் கவனம் பெற்றுள்ளது.

-நீரை. மகேந்திரன்.