×

இணையத்தை கலக்கும் “குட்டி தல”… அழகு சிரிப்பில் அஜீத் மகன்…

நடிகர் அஜீத்தின் மகன் ஆத்வக்கின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் தல என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகர் அஜீத்குமார். முன்னணி நடிகராக இருக்கும் அஜீத், தற்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் பிசியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான அமர்களத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ஷாலினி. இந்த படத்தின் மூலம் நடிகர் அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். திரையுலகில்
 

நடிகர் அஜீத்தின் மகன் ஆத்வக்கின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழகத்தில் தல என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகர் அஜீத்குமார். முன்னணி நடிகராக இருக்கும் அஜீத், தற்போது எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் பிசியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான அமர்களத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ஷாலினி. இந்த படத்தின் மூலம் நடிகர் அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். திரையுலகில் நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

நடிகர் அஜீத்திற்கு மீடியா பப்ளிசிட்டி பிடிக்காது என்பதால் குடும்பத்துடன் வெளியே பார்ப்பது அரிது. அஜீத்-ஷாலினி ஜோடியின் புகைப்படங்களும் எப்போதாவது தான் வெளியாகி வைரலாகும்.

இந்நிலையில் நடிகை ஷாலினி சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது அஜீத்தின் மகன் ஆத்விக்கும் கலந்துகொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஆத்விக் க்யூட்டாக சிரிக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம தல அஜீத்தின் மகனா இவர் என்று பூரித்து போய் உள்ளனர்.