×

சர்வதேச விழாவில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி… வைரலாகும் புகைப்படங்கள்…

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கூழாங்கல் படத்தை சர்வதேச விழாவில் திரையிட ஜோடியாக கலந்துக்கொண்டுள்ளனர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி. விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் இவர்களிடையே காதல் மலர்ந்தது. எப்போதும் நெருங்கி பழகிய வரும் இவர்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே வலம் வருகின்றனர். விக்னேஷ் சிவன் படம் இயக்குவதிலும், நயன்தாரா நடிப்பதிலும் பிசியாக இருந்து வந்த
 

ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கூழாங்கல் படத்தை சர்வதேச விழாவில் திரையிட ஜோடியாக கலந்துக்கொண்டுள்ளனர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்.

திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி. விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் இவர்களிடையே காதல் மலர்ந்தது. எப்போதும் நெருங்கி பழகிய வரும் இவர்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே வலம் வருகின்றனர். விக்னேஷ் சிவன் படம் இயக்குவதிலும், நயன்தாரா நடிப்பதிலும் பிசியாக இருந்து வந்த நிலையில் சொந்தமாக ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது இந்த நிறுவனம் சார்பில் நயன் தாராவின் ‘நெற்றிக்கண்’ படமும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு’ காதல் என்ற படமும் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘ராக்கி’ படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது ரௌடி பிக்சர்ஸ்.

இளம் இயக்குனர்களை ஊக்குவித்து வரும் இந்த நிறுவனம், அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்து விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி அறிக்கை ஒன்றை கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டிருந்தனர். அதில் இந்த தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. எனவே இந்த படத்தை சர்வதேச விழாவிற்கு கொண்டு செல்வோம் என கூறியிருந்தனர்.

அதன்படி அயலாந்து நாட்டில் இன்று நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு ‘கூழாங்கல்’ படம் போட்டியிட்டுள்ளது. இந்த விழாவில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம் ‘கூழாங்கல்’. இந்த விழாவில் கலந்துகொண்ட நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வேஷ்டி புடவையில் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். அப்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.