×

சிம்புவுக்கு எல்லாமே வெற்றிதான்… முதல்நாள் வசூல் எவ்வளவு ?

முதல் நாளே 7கோடி வரை வசூல் சாதனை செய்ததால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. பொங்கல் அன்று சிம்பு நடித்து வெற்றிக்கரமான ஓடிக்கொண்டிருக்கும் படம் ஈஸ்வரன். நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் சிம்பு நடித்துள்ளதை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர். சுசீந்திரன் இயக்கிய இந்தப்படம் சிம்புவின் ‘கம் பேக்’ என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படத்தை குடும்பம், குடும்பமாக பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில்
 

முதல் நாளே 7கோடி வரை வசூல் சாதனை செய்ததால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

பொங்கல் அன்று சிம்பு நடித்து வெற்றிக்கரமான ஓடிக்கொண்டிருக்கும் படம் ஈஸ்வரன். நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் சிம்பு நடித்துள்ளதை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர்.

சுசீந்திரன் இயக்கிய இந்தப்படம் சிம்புவின் ‘கம் பேக்’ என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படத்தை குடும்பம், குடும்பமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாரான இப்படத்தை திரையிடுவதில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்தது. இருந்தப்போதிலும் படம் வெற்றிக்கரமான திரையிடப்பட்டது. குறைவான தியேட்டர்களிலே வெளியான இப்படம் வசூல் ரீதியான சாதனைப்படைத்துள்ளது. உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இப்படத்தின் முதல்நாள் வசூல் 7கோடி வரை இருக்கும் எனவும், சென்னையில் மட்டும் 20லட்சம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.