×

சீமான் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு...!

 

நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு சீமானின் தர்மயுத்தம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் கூட அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், தற்போது அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’சீமானின் தர்மயுத்தம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.