×

நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ஜி.வி.பிரகாஷ் படம்…புது ரூட்டில் செல்கிறதா திரையுலகம் ?

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சினிமா துறையில் புதிய எடுக்கும்போது புதுபுது யுக்திகளை காலப்போக்கில் மாற்றிக்கொண்டே போகின்றனர் இயக்குனர்கள். ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்திய கிரீன் மேட் கிராபிக்ஸ், மோஷன் கிராபிக்ஸ் தொழிற்நுட்பங்களை தற்போது இந்தியாவிலும் பயன்படுத்துக்கின்றன. இதனால் இந்தியா சினிமாக்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன. சினிமாவில் ஒருபக்கம் தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தும் அதேநேரத்தில் மறுபுறம் திரைப்படங்களை வெளியிடுவதிலும் சில விஷயங்களை படத்தின் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். காலம்காலமாக திரையரங்களில் மட்டுமே வெளியிட்ட
 

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சினிமா துறையில் புதிய எடுக்கும்போது புதுபுது யுக்திகளை காலப்போக்கில் மாற்றிக்கொண்டே போகின்றனர் இயக்குனர்கள். ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்திய கிரீன் மேட் கிராபிக்ஸ், மோஷன் கிராபிக்ஸ் தொழிற்நுட்பங்களை தற்போது இந்தியாவிலும் பயன்படுத்துக்கின்றன. இதனால் இந்தியா சினிமாக்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.

சினிமாவில் ஒருபக்கம் தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தும் அதேநேரத்தில் மறுபுறம் திரைப்படங்களை வெளியிடுவதிலும் சில விஷயங்களை படத்தின் தயாரிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். காலம்காலமாக திரையரங்களில் மட்டுமே வெளியிட்ட திரைப்படங்கள், கொரோனா காலத்தில் ஓடிடி மூலம் இணையதளங்களில் வெளியாகின. தற்போது அதையும் தாண்டி புதிய படங்களை டிவிக்களில் வெளியிடும் புதிய முறையை சிறு தயாரிப்பாளர்கள் கொண்டு வந்துள்ளனர்.

பிரசன்னா நடித்த ‘நாங்க ரொம்ப பிஸி’, படம் கடந்த தீபாவளிக்கு நேரடியாக டிவியில் வெளியிடப்பட்டது. இதேபோன்று கடந்த பொங்கலுக்கு வெளியான விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஏற்கனவே இயக்குனர் ராஜேஷ், ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி, ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்-க்கு ஜோடியாக பிகில் பட நாயகி அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் இந்த படத்தை நேரடியாக டிவியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுபோன்று டிவியில் வெளியிடும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், இதன் சாதக பாதகங்கள் என்ன என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.