×

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அப்டேட் ரிலீஸ்

 

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு வந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தை இயக்கியது மட்டும் அல்லாமல் கதானயகனகவும் தடம் பதித்தார்.

இந்த படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதில் நடிகையாக இவானா, ராதிகா, மற்றும் சத்யராஜ், யோகிபாபு பலரும் நடித்து ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. மற்றும் குறைந்த பட்ஜெட்டில் இயக்கிய இந்த படம் ரூபாய் 100 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியது.

இந்நிலையில், பிரதீப் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், படத்திற்கு அனிருத் இசை அமைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.