×

மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘விஜய்’ புதிய புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு…

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் மாஸ்டர். இதில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்க, அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் கடந்த பொங்கலையொட்டி வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.
 

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் மாஸ்டர். இதில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்க, அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் கடந்த பொங்கலையொட்டி வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. திரையரங்குளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த படத்தின் ஒரு வார வசூல் தமிழகத்தை பொறுத்தவரை 40 கோடியாகவும், உலக அளவில் 100 கோடியாகவும் உள்ளது.

மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இரு தினங்களுக்கு முன்பு அமேசான் பிரைமில் 240 நாடுகளில் வெளியாகி 28 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் விஜய், மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் அந்த புகைப்படத்தில் இருந்தனர். ஷூட்டிங் நடந்த காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.