×

‘கபடதாரி’ படம் எப்போது? டிரெய்லரை வெளியிட்ட படக்குழு

கபடதாரி படம் எப்போது வெளியிடப்படும் என தேதியை அறிவித்துள்ள படக்குழு, அப்படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. நடிகர் சிபி சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் கபடதாரி. கன்னடத்தில் வெற்றிப்பெற்ற கவலுதாரி படத்தின் ரீமேக்கான இப்படத்தை பீரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிபி சத்யராஜ்-க்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். நாசர், ஜெயபிரகாஷ், தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சைமன் கே கிங் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன்
 

கபடதாரி படம் எப்போது வெளியிடப்படும் என தேதியை அறிவித்துள்ள படக்குழு, அப்படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் கபடதாரி. கன்னடத்தில் வெற்றிப்பெற்ற கவலுதாரி படத்தின் ரீமேக்கான இப்படத்தை பீரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிபி சத்யராஜ்-க்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார். நாசர், ஜெயபிரகாஷ், தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சைமன் கே கிங் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கபடதாரி படம் வரும் ஜனவரி 28ம் தேதி திரைக்கு வருகிறது.