×

நடிப்பில் கடோத்கஜன் 'எஸ்வி ரங்காராவ்' பிறந்தநாள் சிறப்புப் பதிவு!

சிறப்பு என்பதற்கு மறுவடிவமாகத் திகழ்ந்தவர் சாதனை நடிகர் எஸ்வி ரங்காராவ். விஸ்வ நாடக சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் பழைமையான பாரம்பரியம் மிக்க நடிகரான எஸ்வி ரங்காராவ் தலைமுறைகளை கடந்து நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர். இவருடைய திரைவாழ்வின் கடைசி வரை சுமார் 25 ஆண்டுகளாக சிறப்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர். அவருடைய பிறந்த நாள் இன்று! சமர்ல வெங்கட் ரங்கா ராவ் என்று அழைக்கப்படும் நடிகர் எஸ்வி ரங்காராவ் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகங்களில் திரைத்துறையில்
 

சிறப்பு என்பதற்கு மறுவடிவமாகத் திகழ்ந்தவர் சாதனை நடிகர் எஸ்வி ரங்காராவ். விஸ்வ நாடக சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் பழைமையான பாரம்பரியம் மிக்க நடிகரான எஸ்வி ரங்காராவ் தலைமுறைகளை கடந்து நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர். இவருடைய திரைவாழ்வின் கடைசி வரை சுமார் 25 ஆண்டுகளாக சிறப்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர். அவருடைய பிறந்த நாள் இன்று!
சமர்ல வெங்கட் ரங்கா ராவ் என்று அழைக்கப்படும் நடிகர் எஸ்வி ரங்காராவ் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகங்களில் திரைத்துறையில் இயங்கிய மாபெரும் சாதனையாளர்.
இவருடைய நடிப்பால் தெலுங்கு பேசும் மக்களின் மனதை கொள்ளை கொண்ட ஒப்பற்ற கலைஞர்.

1918 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 3 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நூழிவுடு என்ற இடத்தில் கோடீஸ்வர ராவ்-சமரா லட்சுமி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர்.
இவருடைய தந்தை எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய தாத்தா மருத்துவராகவும், மாமா அரசியல்வாதியாகவும் இருந்தனர்.
பள்ளி கல்வியை ஹிந்துக்கல்லூரியில் முடித்த பிறகு சென்னையில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். அந்த சமயத்தில் நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல மேடை நாடகங்களில் நடிக்க துவங்கினார். அந்த சமயங்களில் அஞ்சலி தேவி,ஆதிநாராயண ராவ், ரெலங்கி போன்ற நடிகர்கள் புகழ் பெற்ற நடிகர்கள். 1944 ல் வீதி காயகுலு என்ற படத்தில் அஞ்சலி தேவியுடன் இணைந்து நடித்தார். இவருடைய நடிப்பை கண்ட இயக்குனர் பிவி.ராமாணந்தம் இவரை விரூதினி என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார். இந்த படம் முடிந்து வெளியான போது இவருடைய நடிப்பிற்காக பாராட்டுதல்களை பெற்றார். அந்த படம் சரியான வரவேற்பை பெறாததால் நடிப்பில் இருந்து சில காலம் விலகி ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா நிறுவனத்தில் நிதி உதவியாளராக பணியில் சேர்ந்தார்.

அதேசமயம் இவருடைய நடிப்பிற்காக கிடைத்த பாராட்டுக்களும் நடிப்பின் மீது இவருக்கு இருந்த ஆர்வமும் இவருக்கு பல வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. தொடர்ந்து அவருடைய திரை வாழ்க்கையும் சிறப்பாக அமைந்தது. இதனை தொடர்ந்து சென்னை வந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
1949 ல் வெளியான மனதேசம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார். இந்த படமே என்டிஆர் அவர்களுக்கும் திரைவாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.தனது திரையுலக வாழ்க்கையில் தெலுங்கில் 162 திரைப்படங்களும் தமிழில் 53 படங்களும் நடித்துள்ளார்.
நாடக சர்வபௌமா, விஸ்வ நாடக சக்ரவர்த்தி,நாடக சேகரா, நாடக சிம்ஹா என்று பல்வேறு சிறப்பு பெயர்களில் இவருடைய ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
மெத்தட் ஆக்டிங் என்ற நடிப்பை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது இவரே. இந்த நடிப்பு பாணியை சஞ்சீவ் குமார், கமல் ஹாசன், அமிதாப் போன்றோர் பின்பற்றி நடித்தனர்.
1963-ல் நர்தனசாலா திரைப்படத்தில் கிச்சகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஜகார்த்தா வில் நடந்த ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

இவர் ஏற்று நடித்த முக்கிய கதாபாத்திரங்களில் கடோத்கஜன், ஹிரண்ய கசிபு, கீச்சகா, அக்பர், பீஷ்மர், துரியோதனன், ராவணன், நரகாசுரன் போன்ற பாத்திரங்கள் முக்கியமானவையாகும். இவர் இயக்கிய சதாரங்கம், பந்தாவ்யாலு என்ற இரண்டு படங்களும் நந்தி விருது பெற்றது.
1950 களில் என்டிஆர் போன்ற முன்னணி நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கியவர். 1950 முதல் 1970 வரை தெலுங்கு திரையுலகின் பொற்காலம் என்று கூறலாம். இந்த காலகட்டத்தில் தான் ரங்கா ராவ் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திரையுலக வாழ்க்கையில் உச்சம் பெற்றார்.

சக நடிகர்களான ஆதிநாராயண ராவ், என்டிஆர், சாவித்திரி, சூர்யகாந்தம் போன்றோருடன் இணைந்து தெலுங்கு திரையுலகை முன்னணிக்கு கொண்டு வந்தார். இவருடைய நடிப்பு திறனாலும், ஏற்றுக்கொண்ட விதவிதமான கதாபாத்திரங்களாலும் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாகின. இவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தார் எனலாம்.
பின்னர் சவுக்காரு என்ற படத்தில் இவர் ஏற்று நடித்த பாத்திரமும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இந்த படத்திலும் என்டிஆர், நடித்திருந்தார்.எவ்வி பிரசாத் இயக்கியிருந்தார். தொடர்ந்து பிஏ சுப்பாராவ் இயக்கத்தில் ‘பல்லேட்டூரி பில்லா’ என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.
அடுத்து பாதாள பைரவி படத்தில் மந்திரகே என்ற பாத்திரத்தில் நடித்தது இவருக்கு மட்டுமல்ல என்டிஆருக்கும் திருப்பு முனையாக அமைந்தது.

இவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் அனைத்தும் சமூக புராண பாத்திரங்களாக அமைந்தது.
மாயாபஜார் படத்தில் ஏற்று நடித்த கடோத்கஜன் பாத்திரம் முக்கியமான பாத்திரம். இந்த படம் “greatest Indian film of all time” என்று சிஎன்என் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் இந்த படம் 1957 ல் சர்வதேச திரைப்பட விழா, இந்தோனேஷியா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
போஜா என்ற கதாபாத்திரத்தில் மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். 1960 ல்இந்த படம் தெலுங்கில் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது.
1963 ல் வெளியான நர்த்தனசாலா படத்தில் கிச்சகா பாத்திரத்தில் நடித்ததற்காக ஜகார்த்தா ஆப்பிரிக்கா ஆசியா திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். இந்த விருதைப் பெற்ற ஒரே இந்திய நடிகர் இவர் மட்டுமே!
1965 ல் பாண்டிய வனவாசமு படத்தில் துரியோதனன் பாத்திரம். 1967 ல் பக்த பிரகலாதன் படத்தில் ஹிரண்ய கசிபு பாத்திரம் சிறப்பான பாத்திரங்கள். இந்த திரைப்படம்நந்தி விருது பெற்றது. 1971 ல் சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணன் கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்க ஒன்று.
இவர் நடித்த முக்கிய திரைப்படங்கள்!
1949 மணதேசம்
1950 பல்லெட்டூரி பில்லா
1953 தேவதாஸ்
1954 பங்காரு பாப்பா
1954 ராஜீபேடா
1957 தோடிகடாலு
1958 செஞ்சு லட்சுமி
1958 பெல்லி நாட்டு பிரமனுலு
1959 நம்மினா பந்து
1962 குண்டம்மா கதா
1963 கற்பகம் தமிழ்
1963 நானும் ஒரு பெண் தமிழ்
1964 பொப்பிலி யுத்தம்
1968 பந்தாவ்யாலு
1968 லட்சுமி நிவாசம்
1971 பிரேம் நகர்
1971 தசரா புல்லோடு
இவருடைய சிறந்த நடிப்பிற்காக இவர் பெயரில் ஆந்திர அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்வி ரங்காராவ் நினைவு விருது.
-@Shivakkumar TD