×

'நான் ஒரு தடவை சொன்னா…' பாலகுமாரன் எழுதிய பளீர் வசனங்கள்! #Balakumaran

தமிழ் எழுத்துலகம் மட்டுமல்ல தமிழ் சினிமா உலகமும் கொண்டாடும் எழுத்தாளர் பாலகுமாரன். டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பாலகுமாரன், எழுத்தின் மீதான காதலால் நாவல்கள், கவிதைகள், சிறுகதை என எழுதிக்குவித்தார். மெர்க்குரிப் பூக்கள், இரும்புக்குதிரைகள் உள்ளிட்ட அவரின் நாவல்கள் சினிமாத் துறையினரையும் ஈர்த்தது. இயக்குநர் பாக்கியராஜ், பாலசந்தர் போன்றோரிடம் நல்ல நட்பில் இருந்தார். எழுத்தாளர் சுஜாதாவிடம் எழுத்தின் சூட்சுமத்தைக் கற்றுக்கொண்டதாக பலமுறை பதிவு செய்திருக்கிறார். சுஜாதாவைப் போலவே பாலகுமாரனும் சினிமாவில் தடம் பதித்தவர். இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி
 

தமிழ் எழுத்துலகம் மட்டுமல்ல தமிழ் சினிமா உலகமும் கொண்டாடும் எழுத்தாளர் பாலகுமாரன். டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பாலகுமாரன், எழுத்தின் மீதான காதலால் நாவல்கள், கவிதைகள், சிறுகதை என எழுதிக்குவித்தார். மெர்க்குரிப் பூக்கள், இரும்புக்குதிரைகள் உள்ளிட்ட அவரின் நாவல்கள் சினிமாத் துறையினரையும் ஈர்த்தது. இயக்குநர் பாக்கியராஜ், பாலசந்தர் போன்றோரிடம் நல்ல நட்பில் இருந்தார். எழுத்தாளர் சுஜாதாவிடம் எழுத்தின் சூட்சுமத்தைக் கற்றுக்கொண்டதாக பலமுறை பதிவு செய்திருக்கிறார்.
சுஜாதாவைப் போலவே பாலகுமாரனும் சினிமாவில் தடம் பதித்தவர். இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். மணிரத்னம், ஷங்கர், சுரேஷ் கிருஷ்ணா, துரை, உள்ளிட்ட பல இயக்குநர்களின் படங்களில் வசனம் எழுதியவர். ‘பாட்ஷா’ படத்தின் வெற்றிக்கு பாலகுமாரனின் வசனங்களும் முக்கியப் பங்கு வகித்ததாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். பாலகுமாரனின் எழுத்தின் ஆளுமைக்கு இதுவே சரியான உதாரணம்.

திரைப்படங்களில் பாலகுமாரன் எழுதிய வசனங்கள் பல ஆண்டுகள் கடந்தும் இன்றும் மற்ற படங்களிலும் அன்றாட வாழ்விலுமே பயன்படுத்தப்படுகின்றன. அப்படி சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பாலகுமாரன். அவர் எழுத்தில் உருவான பளீர் வசனங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
நாயகன்
இதுதான் பாலகுமாரன் வசனம் எழுதிய முதல்படம். கமல்ஹாசன் – மணிரத்னம் – இளையராஜா என பலமான கூட்டணியில் உருவான படத்துக்குப் பக்க பலமாக இருந்தன பாலகுமாரனின் வசனங்கள். படம் வெளியானபோது இந்த வசனங்கள் கொண்டாடப்பட்டன. இப்பவும் பல படங்களில் இந்த வசனங்கள் கையாளப்படுவதே இதன் வெற்றி. பாலகுமாரனுக்கு நல்ல அடையாளத்தைத் தந்த படம்.

“வாப்பா… உங்க கிட்ட ஒண்ணு கேட்கலாமா.. தினமும் ஐந்து வேளை நமாஸ் பண்றீங்க… மழையோ வெயிலோ தவறாம தர்க்காவுக்குப் போறீங்க. ஆனா, ராத்திரியில சரக்குக் கடத்த போறீங்களே.. இது தப்பு இல்லையா?
தப்பு இல்ல. நாலு பேருக்கு உதவும்ணா எதுவும் தப்பில்ல’
நாயகன்
நீங்க நல்லவரா… கெட்டவரா…
தெரியலையேப்பா..
பாட்ஷா
ரஜினிகாந்தின் மாபெரும் வெற்றிப்படம். ஒரு நிகழ்ச்சியில், தனது வாழ்க்கையில் முக்கியமான மூன்று படங்களில் ஒன்றாக பாட்ஷாவை ரஜினி கூறியிருந்தார். அந்தளவுக்கு இந்தப் படம் அவருக்கு முக்கியமானது. இதன் வசனகர்த்தா பாலகுமாரன். போலீஸ் கமிஷனரிடம் பேசும் வசனம் நன்றாக இருக்குமா என்ற சந்தேகம் ரஜினிக்கு வந்ததாம். உடனே, தான் அந்ந்த வசனத்தை நடித்துக்காட்டியது ரஜினி ஒத்துக்கொண்டார்’ என ஒரு கட்டுரையில் பாலகுமாரன் குறிப்பிட்டுள்ளார். சின்னக் குழந்தைகளுக்குப் பிடித்த வசனங்கள்தாம் இவை.

‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி…’
முகவரி:
இயக்குநர் துரையின் முதல் படம் முகவரி. தகுதி உள்ள ஓர் இளைஞன், இசையமைப்பாளராகப் போராடுவதே கதை. அதற்கு நம்பிக்கை அளிக்கும் வசனங்கள் அவசியம். அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்தார் பாலகுமாரன். படத்தின் சரியான இடத்தில் தங்கக் கிணரு கதையை இணைத்தது பலரின் பாராட்டையும் பெற்றது.
‘ஜெயிக்கலைன்னா மக்குனு சொல்வாங்க. ஜெயிச்சிட்டா லக்னுடுவாங்க.
‘தங்கம் கிடைக்கிற வரை தோண்டணும்; ஜெயிக்கிற வரைக்கும் போராடணும்’
 

‘ஒரு மனுசனின் சாதனையை உலகமே பாராட்டினாலும் உண்மையான சந்தோஷமே அவன் குடும்பத்துக்குள்தான்’
காதலன்
ஜென்டில்மேன் எனும் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரின் இரண்டாம் படம். பிரபுதேவா நாயகன். முதல் படத்தின் வசனகர்த்தாவான பாலகுமாரனே இப்படத்திலும் வசனம். ஆக்‌ஷன் படத்திற்கு மட்டுமல்ல, காதல் படத்துக்கும் தன்னால் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என பாலகுமாரன் நிருபித்த படம்.

ஆத்திரமோ அழுகையோ கோபமா சந்தோஷமோ… எதுவாக இருந்தாலும் ஐந்து நிமிஷம் ஒத்திப்போடு. அந்த ஐந்து நிமிஷத்தில் மனசு அமைதியாயிடும். அதற்கப்பறம் எடுக்குற எந்த முடிவாக இருந்தாலும் தெளிவாயிரும்’
புதுப்பேட்டை:
‘காதல் கொண்டேன்’ எனும் மாறுபட்ட சினிமாவை அளித்து எல்லோரையும் வியக்க வைத்தவர் செல்வராகவன். அவரின் அடுத்த படம் புதுப்பேட்டை. அதனால் அப்படம் குறித்து எதிர்பார்ப்பு கூடியது. வசனம் பாலகுமாரன். அவருக்கு இந்தக் களம் புதிது என்றாலும் தனது பாணியில் முத்திரை பதித்தார்.

கழுத்துக்கு மேல தலை இருக்கான்னா தினமும் பார்த்துட்டே இருக்க முடியுமா?
எனக்கு சக்தி இருக்கும்போதே… பணம் இருக்கும்போதே… என் கத்திக்கு பயம் இருக்கும்போதே நான் செட்டிலாகணும்.