விரைவில் முடிவுக்கு வரும் ‘அன்பே சிவம்’ சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘அன்பே சிவம்’ சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘அன்பே சிவம்’. விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சிவ மனசுல சக்தி’ சீரியலில் நடித்த விக்ரம் ஸ்ரீ, கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக முதலில் ரக்ஷா ஹாலாவும், பின்னர் அவர் விலகியதை அடுத்து கவிதா கவுடா நடித்து வருகிறார். நல்ல சிவம், அன்புச்செல்வி ஆகிய இருவரும் வழக்கறிஞராக இருக்கின்றனர். கணவன், மனைவியான இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். இவர்களுக்கு ஓவியா மற்றும் இனியா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அந்த பெண்கள் குழந்தை அப்பாவிடம் ஒருவரும், அம்மாவிடம் ஒருவரும் வளர்கின்றனர். 200 எபிசோடுகளுக்கு மேல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் நிறைவுபெற உள்ளதாம். இதற்கு காரணம் ஜீ தமிழில் இரண்டு புத்தம் புதிய சீரியல்கள் ஒளிப்பரப்பாக உள்ளதாம். இதற்காக இந்த சீரியலை நிறுத்த ஜீ தமிழ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.