‘குக் வித் கோமாளி’ சீசன் 3-க்கு சர்ப்ரைஸாக வந்த புகழ்... ஆச்சர்யத்தில் குக்குகளும், கோமாளிகளும் !
‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகர் புகழ் கலந்துக்கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி, தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இதனால் இந்த சீசன் களைக்கட்டியுள்ளது.
இந்த ரோஷினி, வித்யூலேகா, கிரேஸ், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, சந்தோஷ் பிரதாப், மனோபாலா ஆகியோர் குக்காக களமிறங்கி கலக்கி வருகின்றனர். அதேபோன்று கோமாளிகளாக உள்ள சக்தி, மணி மேகலை, ஷிவாங்கி, பாலா, சுனிதா, அதிர்ச்சி அருண் ஆகியோரின் கலாட்டா ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறது.
ஒவ்வொரு இந்த நிகழ்ச்சிக்கு செலிப்ரிட்டி ஒருவர் ஷோவை சுவாரஸ்சியமாக்குகின்றனர். அந்த வகையில் அடுத்த வார எபிசோடில் கடந்த சீசனில் பங்கேற்ற கோமாளியான புகழ் கலந்துக்கொண்டுள்ளார். செம மாஸாக வரும் புகழை பார்த்து குக்குகளும், கோமாளிகளும் உற்சாகமடைகின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது.