×

'பாரதி கண்ணம்மா' சீரியலில் என்ட்ரியாகும் பிரபல நடிகை... ஷாக்கான ரசிகர்கள் !

 

'பாரதி கண்ணம்மா' சீரியலில் பிரபல சினிமா நடிகை ஒருவர் என்ட்ரியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாரதி கண்ணம்மா'. கணவனால் கைவிடப்படும் கண்ணம்மா எப்படி தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது காட்டப்பட்டு வந்தது. தற்போது அந்த கதையை கொஞ்சம் மாற்றி பாரதியுடன் கண்ணம்மா ஒன்று சேருவதுபோன்றும், அதற்கு மகள்கள் உதவி செய்வது போன்றும் காட்சிகள் காட்டப்பட்டப்பட்டு வருகிறது. 

தற்போதைய கதைப்படி பாரதியையும், கண்ணம்மாவையும் ஒன்றாக சேர்க்க அவர்களது மகள்கள் முயற்சி செய்து வருவதுபோன்று காட்சிகள் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் 80-ஸ் நடிகையான நடிகை ரேகா, புதிய கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார். வில்லி வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இதற்கான மாஸ் ப்ரோமோ ஒன்றை பாரதி கண்ணம்மா சீரியல் குழு வெளியிட்டுள்ளது. அதில் கார் ஒன்றில் இருந்து மாஸ் லுக்கில் இருக்கும் ஷர்மிளா, பாரதியின் மருத்துவமனைக்கு வருகிறார். அங்கு பாரதியை சந்திக்கும் ஷர்மிளா, தான் யாரும் என்பதை அறிமுகப்படுத்துகிறார். அதோடு விரைவில் வெண்பா - பாரதி திருமணத்தை நடத்தி வைக்கப் போவதாக கூறுகிறார். இதனால் பாரதி அதிர்ச்சி அடையும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.