×

”விக்ரம்” படத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ராமலிங்கம் -சுந்தரலிங்கம் …!

மாஸ்டர் படத்திற்குப் பிறகு கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என எதிர்பார்த்தநிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது.அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ”ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்” நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் தற்போது புதிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் பிரபு தேவா கமல் ஹாசனுடன் இணைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல் ஹாசன்
 

மாஸ்டர் படத்திற்குப் பிறகு கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என எதிர்பார்த்தநிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே நல்ல வரவேற்பு கிடைத்தது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ”ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்” நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில் தற்போது புதிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் பிரபு தேவா கமல் ஹாசனுடன் இணைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கமல் ஹாசன் மற்றும் பிரபுதேவா இணைந்து கடைசியாக கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான ”காதலா காதலா” படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்படம் காமெடி ரொமான்ஸ் ஜேர்னரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் 22 ஆண்டுகள் கழித்து ஒன்றாக நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.