×

சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் ராகவ்... 

 

பிரபல சீரியல் மூலம் நடிகர் ராகவ் மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.

சின்னத்திரையில் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் ராகவ். நீண்ட நாட்களாக நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த அவர், மீண்டும் சீரியல் ஒன்றின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளார். அந்த சீரியலில்  மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்கே, ஜெயஸ்ரீ ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர். இதுதவிர வடிக்கரசி, ஜீவன் ஜி, ரேகா கிருஷ்ணப்பபா, கவிதா சோலைராஜா, கோவை பாபு உள்ளிட்டோரும் இந்த சீரியலில் உள்ளளனர். 

இந்த சீரியலில் இணைந்தது குறித்து பேசியுள்ள நடிகர் ராகவ் ரங்கநாதன், இந்த சீரியல் இணைவதில் ஆர்வமாக உள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்புக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது புதிய பயணத்தில் சீரியல் ஆதரவளிப்பபார்கள் என்று நான் நம்புகிறேன்  என்றார்.