×

'சீதாராமன்' சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை... திடீர் விலகலால் ரசிகர்கள் அதிர்ச்சி !

 

'சீதாராமன்' சீரியலில் இருந்து பிரபல நடிகை பிரியங்கா நல்காரி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ‌

 சின்னத்திரையில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகையாக இருப்பவர் பிரியங்கா நல்காரி. ஐதராபாத்தை சேர்ந்த அவர், சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமானவர். கடந்த சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வந்த அந்த சீரியல் சமீபத்தில் நிறைவுபெற்றதை தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் 'சீதாராமன்' சீரியலில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை நல்காரி திடீரென 'சீதாராமன்' சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில் 'சீதாராமன்' சீரியல் நல்லப்படியாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எனது சொல்வதை தட்ட முடியவில்லை. அதனால் சீரியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார். பிரியங்காவின் இந்த ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

சமீபத்தில் தான் தனது நீண்ட நாள் காதலரான ராகுலை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் திடீரென மலேசியாவில் நடைபெற்றது. தற்போது 'சீதாராமன்' சீரியலின் ஷூட்டிங்கிற்கு கூட மலேஷியாவில் இருந்து தான் வந்து செல்கிறார்.  ‌ 

சீரியலில் நடிப்பதற்கு முன்னர் சினிமாவில் தான் முதல்முதலில் கால்தடம் பதித்தார். தெலுங்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான 'அந்தரி பந்துவயா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் சில படங்கள் நடித்த அவர், தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரே,. சம்திங் சம்திங், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.