×

கிளாமரில் சினிமா நடிகைகளை ஒரங்கட்டிய தொகுப்பாளினி... வைரல் புகைப்படங்கள் 

 

விஜே மகேஸ்வரி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. 


 

90‘ஸ் இளைஞர்களின் விருப்பமான விஜேவாக இருந்தவர் VJ மகேஸ்வரி. பப்ளியான தோற்றத்தில் அழனான லுக்கில் இருக்கும் இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்களின் உள்ளனர். சன் மியூசிக், இசையருவி போன்ற தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

தனது அழகான சிரிப்பாலும், க்யூட்டான பேச்சாலும் ரசிகர்களை இன்றைக்கும் கவர்ந்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான புது கவிதை உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களுக்கு பிறகு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த மகேஸ்வரி, சாணக்கியன் அவர்களை திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகிவிட்டார். 

திருமணத்திற்கு பிறகு டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த மகேஸ்வரி ‘சென்னை 28 - 2’ படத்தின் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய படவாய்ப்புகளை பெற தொடர்ந்து கிளாமர் ரூட்டில் இறங்கி புகைப்படங்க்ளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இலை மறை காயாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.