×

’எந்த பெண்ணாலும் உன்ன ஜெயிக்க முடியாது’- மனைவி போட்ட குத்தாட்டத்தை புகழ்ந்த சஞ்சீவ்…

தமிழ்நாட்டில் சினிமாவைப்போல் சீரியல்களும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.. குறிப்பாக சில சீரியல்களில் வரும் இளம் ஹீரோயின்களுக்காகவே அதிக அளவு இளைஞர்களும் சீரியல் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.. அதோடு சமூக வலைத்தளங்களில் சின்னத்திரை நடிகைகளை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும், அதிகளவே இருந்து வருகிறது.. அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானஸா.. அந்த சீரியலில் அவர் நடிகர் சஞ்சீவ் உடன் ஜோடியாக நடித்திருந்தார். சீரியலில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ஜோடி, காதலித்து நிஜ
 

தமிழ்நாட்டில் சினிமாவைப்போல் சீரியல்களும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்..  குறிப்பாக சில சீரியல்களில் வரும் இளம்  ஹீரோயின்களுக்காகவே அதிக அளவு  இளைஞர்களும் சீரியல் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.. அதோடு சமூக வலைத்தளங்களில் சின்னத்திரை நடிகைகளை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும்,  அதிகளவே இருந்து வருகிறது..

அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானஸா.. அந்த சீரியலில் அவர் நடிகர் சஞ்சீவ் உடன் ஜோடியாக நடித்திருந்தார். சீரியலில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ஜோடி, காதலித்து நிஜ வாழ்க்கையிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த கொரோனா கால கட்டத்தில் சீரியல் ஷுட்டிங் எதுவும் நடைபெறவில்லை என்பதால் அவர்கள் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். ஆலியா மானசா தொடர்ந்து குழந்தையின் கியூட்டான  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்

திருமணத்திற்கு பிறகு சீரியல், படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஆல்யா விரைவில் புதிய சீரியலில் நடிக்க உள்ளார்.  இந்நிலையில் தற்போது பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்..
அதோடு அவரது கணவர் சஞ்சீவ், ‘எந்த பெண்ணாலும் உன்னை எக்ஸ்பிரஷன்களில் ஜெயிக்க முடியாது’ என பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

???????

A post shared by alya_manasa (@alya_manasa) on Jul 30, 2020 at 7:55pm PDT