சன் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாகும் ‘அனாமிகா’.. புதிய த்ரில்லர் தொடர் !
சன் டிவியில் விரைவில் ‘அனாமிகா’ என்ற புதிய சீரியல் ஒன்று ஒளிப்பரப்பாக உள்ளது.
தமிழகத்தில் சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இரவு வரை இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுப்போக்காக இருப்பது சீரியல்கள் தான். அதனால் அனைத்து முன்னணி சேனல்களும் நாள் முழுவதும் சீரியல்களை ஒளிப்பரப்பி வருகிறது. பொதுவாக சீரியல்கள் என்றால் குடும்ப பின்னணி மற்றும் காதல், மனைவி சார்ந்து தான் இருந்து வருகிறது.
இந்நிலையில் சன் டிவியில் ‘அனாமிகா’ என்ற புதிய சீரியலில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த சீரியல் வழக்கமான சீரியல் போன்று இல்லாமல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி ஒளிப்பரப்பாக உள்ளது. அதனால் வழக்கத்துக்கு மாறாக இந்த சீரியலுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னட சின்னத்திரை நடிகை அக்ஷதா தேஷ் பாண்டே இந்த சீரியலில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். முக்கோணக் காதலின் அடிப்படையில் த்ரில்லர் பாணியில் ஒளிப்பரப்பாக உள்ள இந்த சீரியலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.