×

“டான்ஸ் மாஸ்டர்னா டான்ஸ் ஆடலாம்டா.. ஆணவத்துல ஆடாதீங்க” அனிதா சம்பத்தை கேலி செய்த நடன இயக்குனரைக் கடுமையாகச் சாடிய கணவர்!

அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் தன் மனைவியைப் பற்றி கேலி செய்யும் வகையில் பதிவிட்ட நடன இயக்குனருக்கு பதிலடி கொடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வரும் அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அனிதா தான் கடந்து வந்த பாதை பற்றிப் பகிர்ந்திருந்தார். இதுகுறித்து நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “ஆமா ஆமா அனிதா ஓவர்
 

அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் தன் மனைவியைப் பற்றி கேலி செய்யும் வகையில் பதிவிட்ட நடன இயக்குனருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வரும் அனிதா சம்பத் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அனிதா தான் கடந்து வந்த பாதை பற்றிப் பகிர்ந்திருந்தார்.

இதுகுறித்து நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “ஆமா ஆமா அனிதா ஓவர் தான். கதை மொத்தமாக தவறாகிவிட்டது. மன்னியுங்கள், கதை உணர்வுபூர்வமாகவும் இல்லை, சோகமாகவும் இல்லை. எல்லாரும் ஓடுவாங்க இப்படி விடாம பேசுனீனா. ஓடிக்கிட்டே இருங்கனு மாறி தான் தெரியுது. இந்தக் கொரோனா நமக்கு நிறைய பாடத்தைக் கத்துக் கொடுத்திருக்கு. அதனால தயவு செய்து அமைதியா இருங்க.” என்று தெரிவித்திருந்தார்.

சதீஷின் இந்தப் பதிவிற்கு பதிலளித்த அனிதாவின் கணவர் பிரபாகரன் “ஏன்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசிய தெரிய வாய்ப்பு இல்ல… ஆணவத்துல ஆடாதீங்க இப்படிதான் அடுத்தவன் அனுபவச்ச பசியையும் வலியும் கூட கிண்டல் பண்ண தோனும். பின்குறிப்பு: டான்ஸ் மாஸ்டர்னா டான்ஸ் ஆடலாம்டா.. ஆணவத்துல ஆடாதீங்க..” என்று கடுமையாகச் சாடி பதிலளித்திருந்தார்.

சோகமான ஸ்டோரி மத்தவங்க கிட்ட சொன்னா, அவங்களுக்கும் சோகமா தான் இருக்கும்னு நெனச்சா என்ன சொல்றது. இது சோகமான கதை நம்புங்கன்னு கணவனும் கெஞ்சினா என்ன சொல்லுறது. இவங்க ஆட்டம் என்ன ஆட்டம்ன்னு தெரியல. அவங்க உள்ள அழுவுறதும், நீங்க வெளிய அழுவுறதும். எப்பா சாமி பிபி மாத்திரை வாங்கி வச்சுக்கோங்க” என்று சதீஷ் மீண்டும் பதிவிட்டுள்ளார்.