×

பாக்கியலெட்சுமி: அடக்கடவுளே… அமிர்தா,எழில் வாழ்க்கையில இப்படியா நடக்கணும்!.....

 

இல்லத்தரசிகளின் விருப்பமான தொடராக ஒளிபரப்பாகிவரும் பாக்கியலெட்சுமியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்துள்ளது.

அதன்படி அமிர்தா கோவிலுக்கு எழில் மற்றும் நிலாவுடன் செல்கிறார். அங்கு நிலாவுக்கு நேர்த்திக்கடன் இருப்பதாக கூறிவிட்டு அதை செய்ய தனியாக செல்கிறார். அந்த நேரம் பார்த்து வரும் கணேசன், அமிர்தா என கூப்பிட அவரை பார்த்த அமிர்த்தாவுக்கு இடி இறங்கியது போல அதிர்ச்சி . உடனே எழில்…எழில் என கத்திக்கொண்டு ஓடி வரும் அமிர்த்தா மயங்கி விடுகிறார். அந்த சமயத்தில் வரும் கணேசன் எழிலின் கைய்யை பிடிக்கிறார். அவரை பார்த்து ஷாக்காகுகிறார் எழில். இப்படியா முடிகிறது பாக்கியலெட்சுமி புரொமோ. தொடர்ந்து எழில், அமிர்தா வாழ்கையில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

<a href=https://youtube.com/embed/tcCYXciF_b4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/tcCYXciF_b4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Baakiyalakshmi | 25th to 30th December 2023 - Promo" width="695">