×

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு டாட்டா காட்ட போகும் அந்த நபர் யார் தெரியுமா?

 

பிக்பாஸ் சீசன்7, 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வாரங்கள் செல்ல செல்ல போட்டி கடுமையாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் அந்த நபர் யார் என தகவல் வந்துள்ளது.

பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடந்து வரும் இந்த சீசனில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடந்தது. அதில் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்து நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கினர். இந்த நிலையில் இந்த வாரம் விசித்ரா, சரவண விக்ரம், ரவீனா ஆகிய மூவர் தான் எலிமினேஷனில் உள்ளனர். அதில் விசித்ரா அதிக வாக்குள் பெற்று முதலிடத்திலும், அடுத்து ரவீனாவும் உள்ளனர். வாக்குபடி பார்த்தால், இந்த வாரம் சரவண விக்ரம் தான் வெளியேற உள்ளார். டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் வலம்வந்த சரவண விக்ரம் தான் இந்த வாரம் வெளியேறுகிறார்.