பிரபல சீரியல் நடிகையுடன் காதலா ?.. ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹீரோ குறித்து கசிந்த தகவல் !
பிரபல சீரியல் நடிகையை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஹீரோவான அருண் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. கணவனால் கைவிடப்பட்ட பெண், எப்படி தனியாக வாழ்கிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதை. அதனால் இந்த சீரியலின் கதைதான் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த சீரியலை ஏராளமான இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர்.
இந்த சீரியலில் டாக்டர் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அருண் பிரசாத் நடித்து வருகிறார். நடிகர் அருணுக்கு இதுதான் முதல் சீரியல். ஆனால் முதல் சீரியல் போன்று இல்லாமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சீரியலுக்கு முன்னர் ‘மேயாத மான்’ படத்தில் வைபவ்வுக்கு நண்பராக நடித்திருந்தார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண், சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சீரியலுக்கு வந்தவர். இந்நிலையில் ‘ராஜா ராணி’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனாவும், அருண் பிரசாத் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது விழாவில்கூட இது குறித்து தொகுப்பாளர்கள் மறைமுக கூறி இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.