×

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை காலிசெய்ய போவது இவர்தான்........ வெளியான லேட்டஸ்ட்  தகவல்.

 

பிக்பாஸ் சீசன் 6 துவங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தவாரம் குறைந்த வாக்கு பெற்று யார் வேளியேறபோகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சண்டை, சச்சரவு, மோதல் என பல அதிரடி திருப்பங்களுடன் ரசிகர்களுக்கு தீனிப்போடும் களமாக  மாறிவிட்டது பிக்பாஸ். இதற்கிடையே ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் தனது குடும்பத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி ஜிபி முத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சாந்தி, அசல் கோலார் என அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டனர்

தற்போது இந்த வார நாமினேஷனில் விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா, ஷெரீனா ஆகிய 5 பேர் உள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தற்போதைய தகவல் படி இந்தவாரம்ஷெரீனாவெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல்களை கடந்து யார் வெளியேறுவார் என வர இருக்கும்  எப்பிசோடை பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.