×

வெளியேறினார்களா முக்கிய போட்டியாளர்கள்... கதறி கதறி அழும் காட்சியால் ஷாக்கான ரசிகர்கள் !

 

பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து இரு முக்கிய போட்டியாளர்கள் வெளியேறுவதாக காட்டும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

ஓடிடியில் ஒளிப்பரப்பாகும் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் எலிமினேட்டான போட்டியாளர்கள் மீண்டும் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்துக்கொண்டே இருக்கிறார்கள். 

இதனால் தற்போதுள்ள போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் மீதமுள்ள 6 போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினத்தில் வெளியான 6வது ப்ரோமோவில் பேசும் பிக்பாஸ், இந்த பிக்பாஸ் அல்டிமேட் பினாலே வாரத்தின் இரண்டாவது எவிக்ஷன் நடைபெறுவதாக அறிவிக்கப்படுகிறது. 

இதையடுத்த காட்சியில் பேசும் பிக்பாஸ், இதுவரை உங்க பயணம் எப்படி இருந்தது என்று நிரூப்பிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நான் எவிக்டடா என்று கேட்டு நிரூப் அழும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதேபோன்று வீட்டில் உள்ளவர்களிடம்தான் சொல்லிவிட்டு போகவில்லை. என்னிடமாவது சொல்லிட்டு போவீங்க என்று அமர வைத்திருப்பதாக தாமரைக்கு ஷாக் கொடுக்கிறார் பிக்பாஸ். இதனால் கதறி கதறி அழுகிறார் தாமரை. நிரூப் மற்றும் தாமரை கதறி அழும் காட்சிகளால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.