ப்ரீஸ் டாஸ்க்: விசித்ரா குடும்பத்தின் அழகிய தருணம்.
பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி 80நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களும் முனைப்புடன் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. அதில் போட்டியாளர் விசித்ராவின் குடும்பத்தார் வந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர்.
விசித்ராவின் கணவர் புங்கொத்து கொடுத்து அவருக்கு ப்ரப்போஸ் செய்கிறார். விசித்ராவும் கணவரை கட்டியணைத்து அழ துவங்குகிறார். உடனே பிக்பாஸ் விசித்ராவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்க அவரும் உள்ளே சென்று பிக்பாஸ் மெசேஜை எடுத்து வந்து படிக்கிறார். முடித்த பின்னர்தான் கவனிக்கிறார் அந்த சோபாவில் அவரது மகன் அமர்ந்துள்ளார். இதனை பார்த்து ஷாக்காகியுள்ளார் விசித்ரா. இந்த புரொமோ செம கியூட்டாக உள்ளதாக பிக்பாஸ் விரும்பிகள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.