பிக் பாஸ் 8 : பெண்களுக்கு இடையே வெடித்த சண்டை... ப்ரோமோ இதோ..
பிக் பாஸ் 8 இரண்டாவது நாளான இன்று பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களுக்கு செக் வைக்கும்படி விஷயத்தை செய்துள்ளார். இந்த சீசன் முழுவதும் பெண்கள் ஒரு அணியாகவும், ஆண்கள் ஒரு அணியாகவும் தான் விளையாடப்போகிறார்கள், அதற்காக தான் வீடும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது நாளில் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கு செல்ல வேண்டும் என்றும், ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணிக்கு ஒருவர் செல்லவேண்டும், அதனை அந்தந்த அணியே சேர்ந்து முடிவு எடுத்து சொல்லும்படி பிக் பாஸ் கூறிவிட்டார். இதனால் யாரை அனுப்புவது என்கிற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் பெண்கள் அணியில், பவித்ராவை அனுப்ப முடிவு செய்யும் பேச்சு வந்தது. அப்போது ஜாக்லின், ’பவித்ரா அங்கு சென்றால் பாவம் பார்ப்பார்கள்’ என கூறவும், இருவருக்கும் இடையே சண்டை வெடிக்க, 'பாவம்னு பார்த்து அனுப்பாதீங்க, நான் விளையாடுவேன் என்று தோன்றினால் மட்டும் அனுப்புங்க' என கூறிவிட்டு கண்கலங்கியபடி அங்கிருந்து சென்றுவிட்டார் பவித்ரா.