×

விஜே அர்ச்சனா வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலங்கள்!

விஜே அர்ச்சனாவின் சகோதரி வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆரம்பித்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கம் போல இந்த சீசனில் கலந்துகொண்டவர்களும் தமிழக மக்களிடையே பிரபலமானார்கள். விஜே அர்ச்சனா 10 நாட்கள் கழித்து தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். நன்றாக விளையாடி ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். 77வது நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார். பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தாலும்
 

விஜே அர்ச்சனாவின் சகோதரி வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆரம்பித்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கம் போல இந்த சீசனில் கலந்துகொண்டவர்களும் தமிழக மக்களிடையே பிரபலமானார்கள். விஜே அர்ச்சனா 10 நாட்கள் கழித்து தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். நன்றாக விளையாடி ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். 77வது நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தாலும் நட்புடன் தொடர்வது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு ஷிவானி வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பாலா, ஆஜித் என பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தற்போது விஜே அர்ச்சனாவின் சகோதரிக்கு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி, ஆரி, அனிதா சம்பத், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.