கமல்ஹாசனை கிழித்து தொங்கவிட்டுள்ள பிக்பாஸ் போட்டியாளர்... இந்த வாரம் குறும்படம் வருமா?
பிக்பாஸில் போட்டியாளராகக் களமிறங்கியுள்ள அபிஷேக் ராஜா கமல்ஹாசனை விமர்சித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நேற்று துவங்கியுள்ளது. இந்த சீசனுக்காக புதிய செட் சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது. இந்த சீசனில் அறிமுகம் இல்லாத பல போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.
இந்த சீசனில் நான்காவது போட்டியாளராக சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா இணைந்துள்ளார். அபிஷேக் ராஜா சினிமா விமர்சகர், நடிகர் மற்றும் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அபிஷேக் ராஜா இதற்கு முன்னாள் எப்போதே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது கமல்ஹாசனை கண்டபடி விமர்சித்து பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கண்ணால பாக்கறத கூட நம்ப முடில. ஊருக்கே தெறியும்டா உங்கள கேமரா வச்சு எடுத்துட்டு இருக்காங்கனு. ஆன கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சிஎம் ஆகணும்னு பண்ற வேலைலாம் இருக்கு தெரியுமா? முடியலடா என்னால கேட்டா பிக்பாஸ்ங்குறாங்க." என்று பேசியுள்ளார்.
இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்ஹாசனை கழுவி ஊற்றிய அபிஷேக் ராஜா தற்போது பிக்பாஸ் வீட்ற்குள்ளே நுழைந்துள்ளார். இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
வரும் வாரத்தில் ஒரு குறும்படம் எதிர்பார்க்கலாம் போல!