×

பிக்பாஸ் வீட்டில் இன்று.. நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்.. முட்டி மோதும் போட்டியாளர்கள்..

 

பிக் பாஸ் வீட்டில் யார் கெத்து என்ற நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் இன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த டாஸ்கில் வெற்றி பெற போட்டியாளர்கள் முட்டி மோதி வரும் காட்சிகள், இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் வெளியாகி உள்ளன.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 11-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி, அன்றைய தினம் எபிசோடை எதிர்பார்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், சற்றுமுன் வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், "யார் கெத்து" என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. மொத்தம் மூன்று வீடுகளில், எந்த வீடு அறிவில், திறமையில் மற்றும் டீம் ஒர்க்கில் சிறந்தது என்பதற்கான டாஸ்க் வைக்கப்படுகிறது என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். இந்த டாஸ்கின் முடிவில், ஒரு வீட்டுக்கு நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


இதனை அடுத்து, "1000 கோவில்கள் கொண்ட நகரம் எது?" திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை என்று பிக்பாஸ் கேள்வி கேட்டவுடன் மூன்று டீம்களில் உள்ளவர்கள் வேகமாக வந்து பஸ்ஸரை அழுத்த, பஸ்ஸரே உடைந்து போகிறது. அதில் தீபக் கீழே விழுந்து விடுகிறார். அவரை எல்லோரும் தூக்கி விட முயற்சிப்பதுடன் இன்றைய ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று, நாமினேஷன் ஃப்ரீ பெறுவது யார் என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.