×

பிக் பாஸ் ப்ரோமோ : விஷால் - பவித்ரா இடையே கடும் சண்டை.. 

 
பிக் பாஸ் சீசன் 8ன் மூன்றாவது நாளின் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியவந்துள்ளது. இதில் பவித்ரா மற்றும் விஷால் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது என தெரிகிறது.பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும், ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் வரவேண்டும் என பிக் பாஸ் கூறியதன் காரணமாக, பெண்கள் அணியில் இருந்து பவித்ரா ஆண்கள் அணிக்கு வந்தார்.
இந்த நிலையில், வெளிவந்துள்ள ப்ரோமோவில், விஷால் பவித்ராவை டி போட்டு கூப்பிட்ட நிலையில், என்ன அப்படி கூப்பிடவேண்டாம் என கூற, நான் உன்னை தவறாக சொல்லவில்லை, இங்கு அனைவரும் உன்னை டி போட்டு தான் அழைக்கிறார்கள் அதே போல் தான் நானும் அழைத்தேன் என விஷால் கூறுகிறார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கடும் சண்டையாகிறது. இருவரையும் சமாதானம் செய்ய மற்ற ஹவுஸ்மேட்ஸ் முயற்சி செய்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இதனுடைய முடிவு என்னவென்று.   <a href=https://youtube.com/embed/ijHHq0ZafwA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/ijHHq0ZafwA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">