×

15 பெண்களை ஏமாற்றினாரா பிக்பாஸ் விக்ரமன் ?... பெண் வழக்கறிஞர் வெளியிட்ட ஆதாரத்தால் பரபரப்பு !

 

 தன்னை பிக்பாஸ் விக்ரமன் ஏமாற்றிவிட்டதாக வழக்கறிஞர் கிருபை முனுசாமி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆதாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்  பிரபலமான விக்ரமன். சிறப்பாகவிளையாடி வந்த அவர் பிக்பாஸ் வின்னராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடம் பிடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனால் சர்ச்சையும் எழுந்த நிலையில் பல்வேறு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.‌ பிரபலமாக இருக்கும் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். 

இந்நிலையில் விக்ரமன் தன்னை ஏமாற்றி விட்டதாக சமூக செயற்பாட்டாளரும், பெண் வழக்கறிஞருமான கிருபை முனுசாமி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதில் 3 ஆண்களாக என்னை காதலித்து வந்த விக்ரமன், திருமணம் செய்வதாக ஏமாற்றினார். பலமுறை ஜாதி ரீதியாக என்னை கொச்சைப்படுத்தியதாகவும், பணம் கேட்டு டார்ச்சர் செய்தார். இது வாட்ஆப்பில் இருவரும் பேசிய ஸ்கிரீன் ஷாட்டுகள் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். 

இதுவரை 15-க்கும் மேற்பட்ட பெண்களை விக்ரமன் ஏமாற்றியுள்ளார். அதில் சில பெண்கள் திருமணமானவர்கள். விக்ரமனால் மிகுந்த மனவேதனை அடைந்த நான் தற்கொலை நிலைக்கு சென்றேன். இது குறித்து விடுதலை கட்சி தலைவரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே வழக்கறிஞர் கிருபை முனுசாமிக்கு ஆதரவாக சின்மயி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

null