×

மர்மம் நிறைந்த 'மந்திரப் புன்னகை'... கலர்ஸ் தமிழன் புத்தம் புதிய தொடர் !

 

கலர்ஸ் தமிழில் 'மந்திரப் புன்னகை' என்ற‌ புத்தம் புதிய சீரியல் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. 

 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய தொடர் 'மந்திரப்புன்னகை'. மர்மம் நிறைந்த திடுக்கிடும் சம்பவங்களை வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 150 நாட்கள் மட்டுமே இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ள இந்த சீரியலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 இந்த சீரியலில் காயத்ரி கதாபாத்திரத்தில் நடிகை மெர்ஷீனா நீனுவும், கதிர் கதாபாத்திரத்தில் ஹுசைன் அகமது கானும், குரு விக்ரம் கதாபாத்திரத்தில் நியாஸ் கானும் நடித்துள்ளனர்.  காதல், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த வித்தியாசமான கதைக்களத்தில் இந்த சீரியல் உருவாகி ஒளிப்பரப்பாக உள்ளது. காயத்ரி, கதிர், குரு விக்ரம் ஆகிய கதாபாத்திரங்களை மையப்படுத்தியே இந்த சீரியல் நகரவிருக்கிறது. 

 

புத்திசாலியான கதாநாயகி, தனது காணாமல் போய்விடுவதை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதேபோன்று போலீசாக இருக்கும் கதாநாயகன் கதிர், வில்லன் குரு விக்ரமை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார். காவல் அதிகாரியான கதிரின் செயல்களால் கவரும் கதாநாயகி காயத்ரி அவரை காதலிக்கிறார். இப்படி முக்கோண கதையாக இந்த சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது.