×

கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் ‘பேரழகி 2’.. இரு பெண்களின் கதையை கொண்ட தொடர் !

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ‘பேரழகி 2’ சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.  

கடந்த 2018-ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான சீரியல் ‘பேரழகி’. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த சீரியல் கன்னடத்தில் ஒளிப்பரப்பான ‘லக்சனா’ சீரியலின் ரீமேக்காகும். தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசன் சில ஆண்டுகள் கழித்து ஒளிப்பரப்பாகி வருகிறது. 

இந்த சீரியலில் நக்ஷத்ரா, சுக்ருதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இரண்டு பெண்களை சுற்றி இந்த சீரியலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளையாக இருக்கும் சுக்ருதா நடிப்பதற்கு நக்ஷத்ரா குரல் கொடுக்கிறார். சுக்ருதாவின் குரலால் ஈர்க்கப்படும் இளைஞர் சுக்ருதாவை காதலிக்கிறார். ஆனால் அந்த குரல் நக்ஷத்ரா உடையது. 

இந்த மூவருக்குள் நடக்கும் கதையே பேரழகி. இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. இந்த தொடருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளத.