×

"குக் வித் கோமாளி சீசன் 4"... இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் ?

 

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி கடந்த மூன்று சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளராக நடிகைகள் ஷெரின், சிருஷ்டி டாங்கே, நடிகர் ராஜ் ஐயப்பன், விஜே விஷால், சிவாங்கி, காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரியன் நெளரிகட், மைம் கோபி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

இதுதவிர கோமாளிகளாக புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சுனிதா, ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிச சிவா, குரோஷி உள்ளிட்டோர் செய்யும் கலாட்டாக்கள் தாங்க முடியவில்லை. தற்போது  சுவாரஸ்சியமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. குக் செய்யும் சமையலும், கோமாளிகளின் சேட்டைகளும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட்டாகும் நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கிஷோர் மற்றும் மணிமேகலை வெளியேறிய நிலையில் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் விஜே விஷால், காளையன், விசித்ரா ஆகியோர் இருந்தனர். இறுதியில் காளையன் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.