×

பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக இணைந்துள்ள பிரபல கானா பாடகி!

 

பிக்பாஸ் சீசன் 5 தமிழில் பிரபல கானா பாடகி இசைவாணி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸின் முதல் சீசன் துவங்கியது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து தற்போது வரை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார். நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்டு வந்த சீசன் 5 தமிழில் தற்போது துவங்கியுள்ளது. 

இத சீசனுக்காக புதிய செட் சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ளது.தற்போது வரை பல போட்டியாளர்களின் பட்டியல் வெளியான வண்ணம் இருந்தது. 

விஜய் டீவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற கோபிநாத், சன்டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி, மற்றும் நமிதா(மூன்றாம் பாலினத்தவர்), நடிகர் ராஜு ஜெயமோகன், அக்ஷரா ரெட்டி, ப்ரீத்தி சஞ்சீவ், நடிகர் நிழல்கள் ரவி, நடிகர் நிரூப் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த வரிசையில் பிரபல பின்னணி கானா பாடகி, இசைவாணி கலந்துகொள்ள இருப்பதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. தற்போது அது உறுதியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 தமிழின் முதல் போட்டியாளராக இசைவாணி நுழைந்துள்ளார். 

இசைவாணி பல Independent பாடல்களை பாடியுள்ளார். பிபிசி-யில் பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ் பெண் கானா பாடகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.